‘மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் செல்லாததற்கு இதுதான் காரணம்’ பி.ஆர்.பாண்டியன்

 

‘மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் செல்லாததற்கு இதுதான் காரணம்’ பி.ஆர்.பாண்டியன்

காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் சரியான பருவத்தில் தொடங்க, மேட்டூர் அணை ஜூன் 12 -ம் தேதி திறக்க வேண்டும். இந்தாண்டு திறக்கப்பட்டும் இன்னும் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்ல வில்லை. இதற்கான காரணங்களை விளக்குகிறார் தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் பி.ஆர். பாண்டியன்

‘மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் செல்லாததற்கு இதுதான் காரணம்’ பி.ஆர்.பாண்டியன்

மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் ஆறுகளில் முழுமையாகத் தண்ணீர் வரவில்லை. குறிப்பாக,, அணை திறக்கப்பட்டு ஏழு நாள்களுக்குள் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை. இதற்குக் காரணம், தமிழக ஆறுகளில் வரம்புகளை மீறி மணல் அள்ள விட்டதே. இதையும் மீறி வருகிற தண்ணீரையும் கட்டங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அடிப்படையாகக் கொண்டு பகிர்ந்து அளிப்பதில் சிக்கல் வந்துள்ளன. உரிய காலத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கினால்தான் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்குள் அறுவடையை முடிக்க முடியும். காவிரி பாசனத்திற்கு 18000 கன அடி அணையிலிருந்து திறக்க வேண்டும். தற்போதைய சூழலை அரசு கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயப் பணிகளில் சுணக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.