Home தமிழகம் விளம்பரங்களில் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே விரிசல் - ப. சிதம்பரம்

விளம்பரங்களில் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே விரிசல் – ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “வேளாண் திருத்த சட்டத்தில் வரட்டு கெளரத்தை கையாள்கிறது பாஜக அரசு. பாஜக ஆட்சியினால் செம்மொழியான தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது. முதல்வர் துணை, முதல்வருக்குள் கருத்து வேறுபாட்டை மறைக்கவே, புதிய திட்டங்கள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது. தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம், இதில் பாஜக என்ற நச்சு செடி வளராது, மலராது. வெற்றியை துரோகிகள் மூலம் தேடிக் கொண்டவர்கள் பாஜகவினர்.

பாஜகவில் ஒரு வகுப்பினர் மட்டுமே உள்ளனர் அனைத்து வகுப்பினரும் இருப்பது காங்கிரஸில் தான். கொரோனாவுக்கு மருந்துக்கு கண்டுபிடித்தது பாஜக அல்ல, விஞ்ஞானிகள். அதிமுக ஒரு விளம்பர அரசாக உள்ளது. ஒரு விளம்பரத்தில் முதல்வர் இருக்கிறார். மற்றொன்றில் துணை முதல்வர் இருக்கிறார். விளம்பரத்திலேயே அவர்களுக்குள் குழப்பம் உள்ளது.

பாஜகவின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும். காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது. போவதும் இல்லை. ஒரே தேசம் ஒரே மொழி ஒரே கட்சி இதுதான் பாஜகவின் நோக்கம். அதிமுகவை குறைத்து மதிப்பிடவில்லை. தற்போது அதிகாரத்துடன் பண பலமும் சேர்ந்துள்ளது. மகளிர் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடனில் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

பெரும்பாலானோருக்கு கண்ணின் கீழ் கருவளையம் இருக்கும். இது பல்வேறு காரணங்களால் உருவாகிறது. இதை நீக்குவது அவ்வளவு கடினமான வேலையல்ல. கருவளையங்களை எப்படி எளிதாக நீக்குவது என்பது குறித்து மருத்துவர்களே சொன்ன...

6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? வைகோ விளக்கம்

திமுக தலைமையிலான கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய வைகோ, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள்...

மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம்: கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில...

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

திருவாரூர் திருவாரூர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய பசு மாட்டை மீட்க சென்ற தொழிலாளி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர்...
TopTamilNews