ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கு புதிய இல்லம்?.. வெங்கையா நாயுடு நிராகரிக்க வேண்டும்… ப.சிதம்பரம்

ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கு புதிய இல்லம்?.. வெங்கையா நாயுடு நிராகரிக்க வேண்டும்… ப.சிதம்பரம்

ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கும் புதிய இல்லம் கட்டும் யோசனையை வெங்கையா நாயுடு நிராகரிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தொற்றுநோய் காலத்தில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா திட்டம்) கட்டுமான பணியை மேற்கொண்டு வருவதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், டெல்லியில் நார்த் பிளாக் மற்றும் ராஷ்டிரபதி பவனுக்கு அடுத்த இடத்தில் ரூ.192 கோடி மதிப்பீட்டில் துணை குடியரசு தலைவருக்கு புதிய குடியிருப்பு கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் உறுதிப்படுத்தாத தகவல் வெளியானது.

ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கு புதிய இல்லம்?.. வெங்கையா நாயுடு நிராகரிக்க வேண்டும்… ப.சிதம்பரம்
வெங்கையா நாயுடு

ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கு புதிய குடியிருப்பா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் சிக்கனம் என்பது உயர்ந்த இடங்களில் கண்காணிப்பு வார்த்தையாக இருக்க வேண்டும். ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கு குடியிருப்பு என்பது வெறுப்பானது.

ரூ.192 கோடியில் துணை குடியரசு தலைவருக்கு புதிய இல்லம்?.. வெங்கையா நாயுடு நிராகரிக்க வேண்டும்… ப.சிதம்பரம்
காங்கிரஸ்

ஸ்ரீ வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக இருக்கும்வரை அந்த யோசனையை நிராகரிக்க வேண்டும். இது மற்றொரு தற்பெருமை திட்டம். தற்பெருமை அழியட்டும் மற்றும் நல்லறிவு நிலவட்டும் என்று பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை தற்பெருமை திட்டம் மற்றும் பொதுமக்களின் பணம் வீணாக்குகிறது என்று குற்றம் சாட்டி வருகிறது.