ஓபிஎஸ்-க்கு தென் மாவட்டங்களின் கவலை; ப.சிதம்பரம் கிண்டல்!!

 

ஓபிஎஸ்-க்கு தென் மாவட்டங்களின் கவலை;  ப.சிதம்பரம் கிண்டல்!!

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்ற பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் பன்வாரிலால் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தார். வன்னியர் இட ஒதுக்கீட்டை அதிமுக பெற்று கொடுத்துள்ளது வன்னியர் சமுதாயத்திற்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும் இது மற்ற சமுதாயத்தில் பெரும் எதிர்ப்பலைகளை பெற்றுள்ளது.

ஓபிஎஸ்-க்கு தென் மாவட்டங்களின் கவலை;  ப.சிதம்பரம் கிண்டல்!!

இதனால் சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான்.சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும்” என்றார். இதை கேட்ட கடுப்பான ராமதாஸ் , சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது. வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்துள்ளார்” என்றார்.இப்படி வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறி மாறி வெவ்வேறு கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை! இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு! முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது? ” என்று பதிவிட்டுள்ளார்.