தமிழ் மொழி தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே- ப.சிதம்பரம்

 

தமிழ் மொழி தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே- ப.சிதம்பரம்

இன்று இந்தி தினத்தை அடுத்து பாஜக தலைவர்கள் பலரும் இந்தி மொழியைப் புகழ்ந்து பேசி வருகின்றனர். நாட்டை ஒருங்கிணைக்க இந்தி உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு எதிராக இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி காலை முதல் ட்விட்டரில் இந்தி தினத்துக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் உலாவந்தன.

இந்நிலையில் இந்தி தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் தொல்லியில் அகழாய்வுகள் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழப் பண்பாட்டின் வேர்கள் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்குப் பெருமையளிக்கிறது. இன்று இந்தி தினம் என்று இந்தி மொழி பேசுபவர்கள் பெருமைப்படுகிறார்கள். அவரவர் மொழியை அவரவர் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். தமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.