வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?- ப.சிதம்பரம்

 

வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?- ப.சிதம்பரம்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அங்கு இன்று காலை மீண்டும் ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.

இவ்வாறு உத்திர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடருவதை கண்டித்து அங்கு போராட்டங்கள் வெடிக்கின்றன. அதன் காரணமாக, ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் தடை விதித்திருக்கும் நிலையில், தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?- ப.சிதம்பரம்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “ ராகுலும், பிரியங்கா காந்தியும், எந்த ஆயுதங்களையும் கொண்டு செல்லவில்லை. அமைதியான வழியிலேயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களின் அமைதி போராட்டத்தை காவல்துறையினர் தடுத்தது ஏன்?; அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு?; நாட்டின் சட்டங்கள் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பொருந்தாதா?. உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினருக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.