மோடி அரசு இதை ஒப்புக்கொள்கிறதா?- ப.சிதம்பரம் கேள்வி

 

மோடி அரசு இதை ஒப்புக்கொள்கிறதா?- ப.சிதம்பரம் கேள்வி

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் ஏற்படவில்லை. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தரவுகளில் உயிரிழப்புகள் பதிவானதாக குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். கொரோனா இரண்டாம் அலையின்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகள் இல்லையென மத்திய அரசு தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மோடி அரசு இதை ஒப்புக்கொள்கிறதா?- ப.சிதம்பரம் கேள்வி

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “அன்று – ஆக்சிஜன் தட்டுப்பாடே கிடையாது என்று சொன்னார்கள். இன்று – ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் மரணம் அடையவில்லை என்று சொல்லுகிறார்கள். அப்படியென்றால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது என்று மோடி அரசு ஒப்புக்கொள்கிறதா?

உத்தரவு இல்லாமல் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால், உத்தரவு பிறப்பித்து உளவு பார்த்தோம் என்று அரசு ஒப்புக்கொள்கிறதா?. உத்தரவு பிறப்பித்தது யார்? எந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தார்கள்? அந்த மென்பொருளின் பெயர் என்ன? எந்த நாட்டு நிறுவனத்திடமிருந்து என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்? இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவார்கள்? என அடுக்கடுக்காக பல கேள்விகளை ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.