யார் இதற்கு பொறுப்பு ஏற்பது? முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

 

யார் இதற்கு பொறுப்பு ஏற்பது? முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையை காரணம் காட்டி மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தன. இதனால் கோவின் செயலியில் பதிவு செய்த ஏராளமான 18 வயது நிரம்பியவர்களால் தடுப்பூசி போட முடியவில்லை.

யார் இதற்கு பொறுப்பு ஏற்பது? முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது கொரோனாவுக்கு எதிரான போரில் தவறான நிர்வாகத்துக்கு உதாரணம், நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவர் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லையெனில் யார் இதற்கு பொறுப்பு ஏற்பது? மத்திய அரசு மீதான நம்பிக்கையை கைவிட்டு மாநிலங்கள் தங்களுக்கு தேவையான ஆக்சிஜனை தானே ஏற்பாடு செய்ய முன்வரவேண்டும். மத்திய அரசு மூழ்கியுள்ளது. ஸ்ரீபெரம்புதூரில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் தெலுங்கானாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.