PM-CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது நியாயமா?… ப.சிதம்பரம் கேள்வி

 

PM-CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது நியாயமா?… ப.சிதம்பரம் கேள்வி

காங்கிரஸ் கட்சி, சீனா உடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது என்றும் இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாகவும் பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டினார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளது எனவும் , பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? சீனா எப்பொழுது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020 இல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களுடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களுடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீயும், இந்தியப் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவிகின்றன! இது எப்படி இருக்கு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.