விவசாயிகளின் கடன் ரத்துக்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கடிதம் வந்துள்ளதா? ப.சிதம்பரம்

 

விவசாயிகளின் கடன் ரத்துக்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கடிதம் வந்துள்ளதா? ப.சிதம்பரம்

அதிமுக அரசு வெளியிட்டுள்ள கடன் ரத்து அறிவிப்பு வெற்று அறிவிப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளில் எதை செய்தோம் என சொல்ல மறுக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4.85 லட்சம் கடன் வைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி செல்லப்போகிறார். கடனை ரத்து செய்ய வேண்டுமெனில் வங்கிகளுக்கு ரூ.12,110 கோடியை சுளையாக எடுத்து வைக்க வேண்டும். விவசாயிகளின் கடன் ரத்துக்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கடிதம் வந்துள்ளதா? கடனை ரத்து செய்ய வேண்டுமெனில் வங்கிகளுக்கு ரூ.12,110 கோடியை சுளையாக எடுத்து வைக்க வேண்டும். 6 பவுன் நகை கடன் ரத்து என்றால் எந்த வங்கியில் அடைமானம் வைத்தது?

விவசாயிகளின் கடன் ரத்துக்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கடிதம் வந்துள்ளதா? ப.சிதம்பரம்

இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று அடுக்கடுக்காக அறிவிப்பு வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி” என தெரிவித்தார்.