கொரோனா தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி – ப. சிதம்பரம்

 

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி – ப. சிதம்பரம்

மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கவில்லை. மாறாக பாஜக ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்துக்கு 40 லட்சம், குஜராத்துக்கு 30 லட்சம் தடுப்பு மருந்துகளை பாஜக அரசு அனுப்பியுள்ளது. அரியானாவுக்கு 24 லட்சம் தடுப்பூசி மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவிற்கு வெறும் 7.43 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி – ப. சிதம்பரம்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், “கொரோனா தொற்றுக்கு போடப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தையே மத்திய அரசு குளறுபடி ஆக்கிவிட்டது. தேவைப்படும் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்காததால் தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா தடுப்பூசி போடுவதில் 5 ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகிறார். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது.மகாராஷ்டிராவுக்கு தேவையான தடுப்பூசி தரப்பட்டதா ந கண்ணாடி முன் நின்று மத்திய அமைச்சர் கேள்வி கேட்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.