“அவசரப்பட்டு உளறிட்டியே குமாரு” – பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசை தோலுரித்த ப.சிதம்பரம்!

 

“அவசரப்பட்டு உளறிட்டியே குமாரு” – பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசை தோலுரித்த ப.சிதம்பரம்!

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளால் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்துக்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகளே வாடிக்கையாளர்களாக இருப்பதால், இந்தியாவில் ஒட்டு கேட்டது மத்திய அரசு தான் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள்.

“அவசரப்பட்டு உளறிட்டியே குமாரு” – பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசை தோலுரித்த ப.சிதம்பரம்!

இதனால் இரு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி கிடக்கின்றன. பத்திரிகையாளர்கள் இந்து ராம், சசிகுமார், சிபிஎம் எம்பி ஜான், வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்ட 9 பேர் உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணையில் இருக்கிறது. நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

“அவசரப்பட்டு உளறிட்டியே குமாரு” – பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசை தோலுரித்த ப.சிதம்பரம்!

அதில், “பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொதுவெளியில் பிரமாணப்பத்திரம் மூலம் வெளியிட முடியாது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. எதிரி நாடுகள், தீவிரவாதச் செயல்கள் போன்றவை இருப்பதால், மென்பொருள்குறித்து கூறினால் அவர்கள் தங்களின் மென்பொருளில் மாற்றம் செய்யக் கூடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இதனை மேற்கோள் காட்டி மத்திய அரசு ஒட்டு கேட்டதை ஒப்புக்கொண்டுவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “பிரமாணப் பத்திரத்தில் அனைத்தையும் கூற முடியாத தகவல்கள் மத்திய அரசிடம் இருப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் உளவு பார்கள் மென்பொருள் ஒன்றை பயன்படுத்தியதாக மத்திய அரசு உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டது. அது எந்தக் காரணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. அந்த மென்பொருளின் பெயர் பெகாசஸா? அதுதான் என்றால் அது எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் அரசு பதிலளித்தால் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் அனைத்தும் அவிழ்ந்திவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.