Home அரசியல் மோடி அரசு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தகர்களிடம் சரணடைந்துள்ளது.... ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மோடி அரசு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தகர்களிடம் சரணடைந்துள்ளது…. ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மோடி அரசு கார்ப்பரேட்டுக்ள மற்றும் வர்த்தகர்களிடம் சரணடைந்துள்ளது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதா தொடர்பாக கூறியதாவது: பா.ஜ.க. செய்திதொடர்பாளர்கள் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019ஐ சிதைத்தனர். அந்த அறிக்கையில் விவசாயிகளை ஊக்குவிப்பதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது.

ப.சிதம்பரம்

எங்கள் வாக்குறுதி தெளிவாக இருக்கும்போது, மோடி அரசு கார்ப்பரேட்டுகள் (பெரு நிறுவனங்கள்) மற்றும் வர்த்தகர்களிடம் சரணடைந்துள்ளது.அந்த இரண்டு மசோதாக்களில் தனியார் வாங்குபவரிடமிருந்து பெறும் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக இருக்காது என்ற விதி இல்லை. அத்தகைய விதி ஏன் இல்லை?

விவசாயி


விவசாயிகளுக்கு அணுகக்கூடிய மாற்று சந்தைகளை உருவாக்காமல், இன்று விவசாயிக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை மசோதாக்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் தொடர்பான மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews