எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

 

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

தொற்று நோயான கொரோனா வைரஸ் மற்றும் அதன் விளைவாக நடைமுறையில் உள்ள லாக்டவுனால் நம் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் வழக்கான சராசரி வளர்ச்சி கூட இருக்காது என எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் இந்த நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை பகுதியில் இருக்கும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையில் என்ற தகவல், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு குடைச்சல் குடுக்க எதிர்க்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஒரு படி மேலே போய் ஆர்.எஸ்.எஸ்.-ஐ கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் கூறியிருப்பதாவது:

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு
தேவை சரிந்து விட்டது, 2020-21ல் வளர்ச்சி எதிர்மறையான பகுதியை நோக்கி செல்கிறது என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். பின்னர் அவர் ஏன் அதிக பணப்புழக்கத்தை செலுத்துகிறார்? உங்கள் கடமையை செய்யுங்க, நிதி நடவடிக்கைகளை எடுங்க என அரசிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் வெளிப்படையாக சொல்ல வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு பிறகும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்துக்கும் குறைவான நிதி ஊக்குவிப்பு கொண்ட தொகுப்பாக அரசும், மத்திய நிதியமைச்சரும் தங்களை தாங்களே பாராட்டுகிறதா?. அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை எதிர்மறைக்கு கொண்டு சென்றது என ஆர்.எஸ்.எஸ். வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.