ஜூன் 15ம் தேதியன்று என்ன நடந்தது?… தெரிந்து கொள்வதில் இந்தியர்கள் புதையல் வேட்டை ஆர்வம்…. ப.சிதம்பரம்

ஜூன் 15ம் தேதியன்று என்ன நடந்தது?… தெரிந்து கொள்வதில் இந்தியர்கள் புதையல் வேட்டை ஆர்வம்…. ப.சிதம்பரம்

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு, கடந்த மாதம் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உண்மையை சொல்லவி்ல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. தற்போது எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் பெரும்பாலான இடங்களில் பின்வாங்கி விட்டது. அதேபோல் இந்திய ராணுவமும் தனது துருப்புகளை பின்னால் நகர்த்தியது.

ஜூன் 15ம் தேதியன்று என்ன நடந்தது?… தெரிந்து கொள்வதில் இந்தியர்கள் புதையல் வேட்டை ஆர்வம்…. ப.சிதம்பரம்

சீன படைகள் பின்வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில், பின்வாங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். சீன துருப்புகள் பின்வாங்கின. அதேசமயம் சீன துருப்புகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கினார்கள் தற்போது அவர்கள் எந்த இடத்தில் உள்ளார்கள் என்ற தகவல்களை யாராவது சொல்வார்களா? அதேபோல் இந்திய ராணுவம் எந்த இடத்திலிருந்து பின்வாங்கினார்கள்? சீனா அல்லது இந்தியா எந்த துருப்புகளாவது எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு சென்றார்களா?

ஜூன் 15ம் தேதியன்று என்ன நடந்தது?… தெரிந்து கொள்வதில் இந்தியர்கள் புதையல் வேட்டை ஆர்வம்…. ப.சிதம்பரம்

இந்த கேள்விகளுக்கு பதில்கள் அவசியம். ஏனென்றால் கடந்த ஜூன் 15ம் தேதியன்று என்ன நடந்தது மற்றும் எங்கே என்பதை தெரிந்து கொள்ள இந்தியர்கள் புதையல் வேட்டையில் உள்ளனர் என பதிவு செய்து இருந்தார். எல்லையில் நடந்த சம்பவம் தொடர்பாக உண்மையை மத்திய அரசு கூற வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்