“காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களா? என திமுகவிற்கு கவலை”

 

“காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களா? என திமுகவிற்கு கவலை”

காங்கிரஸ்க்கு குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், “காங்கிரஸ்க்கு கடந்த முறையைவிட இந்தத் தேர்தலில் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவைக் குறை சொல்லிப் பலனில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் நமக்கு 63 தொகுதிகளை ஒதுக்கினர். அதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். இதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளை ஒதுக்கினர். அதில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். இதனால் காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களா? என்ற கவலை திமுகவிற்கு உள்ளது. எனவே திமுகவை குற்றம் சொல்லி பயனில்லை.

“காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களா? என திமுகவிற்கு கவலை”

தமிழகம் முழுவதும் வெற்று பெறுவதை வைத்துதான் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் கணிப்பார்கள். விஷதன்மை வாய்ந்த இயக்கமான பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது. தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு வானதி சீனிவாசன் 2 தலையாட்டி பொம்மைகளை வழங்கினார். அதைப் பார்க்கும்போது ஓபிஎஸ், இபிஎஸ்தான் நினைவுக்கு வருகிறது” எனக் கூறினார்.