“எல்லா அதிகாரத்தையும் கையில வச்சிட்டு வாய் திறக்கலேனா எப்படி?” – பிரதமரை விமர்சித்த ப.சிதம்பரம்!

 

“எல்லா அதிகாரத்தையும் கையில வச்சிட்டு வாய் திறக்கலேனா எப்படி?” – பிரதமரை விமர்சித்த ப.சிதம்பரம்!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்பைவேர் நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் செல்போன் 2019ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

“எல்லா அதிகாரத்தையும் கையில வச்சிட்டு வாய் திறக்கலேனா எப்படி?” – பிரதமரை விமர்சித்த ப.சிதம்பரம்!

பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்துக்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகளே வாடிக்கையாளர்களாக இருப்பதால், இந்தியாவில் ஒட்டு கேட்டது மத்திய அரசு தான் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. அவர்கள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் கூற கேட்கின்றனர். ஆனால் அவர்கள் இருவருமே அமைதி காக்கிறார்கள். இதனால் பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

“எல்லா அதிகாரத்தையும் கையில வச்சிட்டு வாய் திறக்கலேனா எப்படி?” – பிரதமரை விமர்சித்த ப.சிதம்பரம்!

இதனிடையே நேற்று இதுகுறித்து விளக்கமளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம், என்எஸ்ஓ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்புக்காக தான் உலக நாடுகள் தங்களிடம் பெகாசஸ் மென்பொருளை வாங்குவதாக என்எஸ்ஓ நிறுவனம் கூறுகிறது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகமோ அப்படியொரு விஷயமே நடக்கவில்லை என்கிறது. அதேசமயம் உள்துறை அமைச்சகமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் கள்ள மௌனம் சாதிக்கின்றன.

இதை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பெகாசஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது அது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன? ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே! எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவர் ஏன் பேச மறுக்கிறார்?” என்று ட்வீட் செய்துள்ளார்.