• December
    15
    Sunday

Main Area

Main



மோடியை மக்கள் மன்னிக்கமாட்டார்கள், மறக்கமாட்டார்கள்: ப.சிதம்பரம்

chidambaram
chidambaram

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூட தெரிவிக்காத பிரதமர் மோடியை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் தனது அசுர கரங்களால் அலசி போட்டிருக்கிறது. அந்த மாவட்டங்களின் வாழ்வாதாரம் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். தற்போது வரை அம்மாவட்டங்கள் முழுமையாக மீளவில்லை. ஆனால் பிரதமர் மோடியோ கஜா புயல் பாதிப்புகளுக்கு ஒரு ஆறுதல்கூட தெரிவிக்காமல் இருந்தது கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், காஜா புயல் பேரிடர் ஏற்படுத்திய பயங்கர சேதம், உயிரிழப்பு, வாழ்வாதார முடக்கம் ஆகியவற்றிற்கு ஆறுதல் செய்தி கூட தெரிவிக்காத பிரதமரை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் என பதிவிட்டிருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.