யார் டெல்லி மக்கள் என்று கெஜ்ரிவால் உறுதிபடுத்துவாரா? – ப.சிதம்பரம் கேள்வி

 

யார் டெல்லி மக்கள் என்று கெஜ்ரிவால் உறுதிபடுத்துவாரா? – ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி வாசிகளுக்கு மட்டுமே டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ள டெல்லி முதல்வர், யார் டெல்லி மக்கள் என்பதை உறுதிப்படுத்துவாரா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் டெல்லி மக்களுக்கு மட்டும்தான் டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

யார் டெல்லி மக்கள் என்று கெஜ்ரிவால் உறுதிபடுத்துவாரா? – ப.சிதம்பரம் கேள்விஇந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம் இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “டெல்லி மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கு மட்டுமே என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். யார் டெல்லி மக்கள் என்று அவர் தயவு செய்து சொல்வாரா? நான் டெல்லியில் தங்கியிருந்தால் அல்லது வேலை செய்தால் டெல்லிவாசியாக கருதப்படுவேனா?

http://


ஜன் ஆரோக்கியா அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒருவர் தன்னுடைய பெயரை இணைத்திருந்தால் அவர் இந்தியாவின் எந்த ஒரு அரசு, தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற முடியும் என்று நினைத்திருந்தேன். இது போன்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் சட்ட ஆலோசனையை மேற்கொண்டாரா? என்று கூறியுள்ளார்.