• April
    02
    Thursday

Main Area

Main



நஷ்ட கணக்கை காட்டும் ஓயோ நிறுவனம்.... ஒரு வருஷத்துல ரூ.2,390 கோடி நஷ்டமாம்....

ஓயோ
ஓயோ

விருந்தோம்பல் துறையை சேர்ந்த ஓயோ ஹோட்டல்ஸ் அண்டு ஹோம்ஸ் நிறுவனம் தனது 2018-19ம் நிதியாண்டின் நிதிநிலையை தற்போது வெளியிட்டுள்ளது. 2019 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதியாண்டில் ஓயோ ஹோட்டல்ஸ் அண்டு ஹோம்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.2,390 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

ஓயோ

ஓயோ ஹோட்டல்ஸ் அண்டு ஹோம்ஸ் நிறுவனம் அதற்கு முந்தைய நிதியாண்டில் சுமார் ரூ.370 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது. ஆக, சென்ற நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்தியதன் விளைவாகவே நஷ்டம் அதிகரித்துள்ளதாக ஓயோ ஹோட்டல்ஸ் அண்டு ஹோம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓயோ

கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஓயோ ஹோட்டல்ஸ் அண்டு ஹோம்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் சுமார் ரூ.6,752 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் சுமார் ரூ.1,500 கோடியாக இருந்தது.

2018 TopTamilNews. All rights reserved.