அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தம்! மூச்சுத்திணறி ஒருவர் பலி

 

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தம்! மூச்சுத்திணறி ஒருவர் பலி

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலியானார்.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தம்! மூச்சுத்திணறி ஒருவர் பலி

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 15க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையே பெரும் பரபரப்புக்குள்ளானது. மருத்துவமனை ஊழியர்கள் கையில் கிடைத்த சிலிண்டரை கொண்டு ஓரிரு பேருக்கு சிகிச்சை அளித்த நிலையில் மற்றவர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அதிக அளவு ஆக்சிகன் குறைந்தது. இதில் சிகிச்சையில் இருந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ராஜேஷ் என்பவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த 36 வயதான ராஜேஷ் கடந்த 11 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜேஷ் உடல் நலம் தேறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது குழந்தையுடன் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தபோதுதான் ஆக்சிஜன் தடை பட்டதாகவும் அடுத்த பத்து நிமிடத்தில் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது அவரது மனைவி கணவரின் மரணத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் தான் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதாகவும், ஆக்சிஜன் நிறுத்தப்படவில்லை என்றால் வெடித்து மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.