ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறும் இந்தியா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறும் இந்தியா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையே மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள்ளது. ஆக்சிஜன்களைக் கொள்முதல் செய்யும் மத்திய அரசோ மாநில அரசுகளுக்குக் கொடுக்காமல் வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் 25 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 20 பேர் பலியாகியிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆக்சிஜன் கொடுக்காதது தான் என்கின்றனர்.

ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறும் இந்தியா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

இச்சூழலில் முறையாக ஆக்சிஜன் வழங்க டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய நீதிமன்றம் பிச்சை எடுத்தாவது ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவதாக உறுதியளித்தது.

ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறும் இந்தியா… பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

இச்சூழலில் நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தொகை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.