சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்!

 

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்!

விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக இன்று ஆக்சிஜன் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் நிரம்பிய நிலையில், புதிதாக சிகிச்சைக்கு வருவோருக்கு இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்!

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் சிவகாசியை சேர்ந்த ஹயக்ரிவாஸ் சர்வதேச பள்ளி, ஜே.சி.ஐ டைனமிக் ஆகியோர் இணைந்து தனியார் பள்ளி பேருந்தை, தற்காலிக ஆக்சிஜன் வார்டாக மாற்றம் செய்துள்ளனர். இந்த பேருந்தில் சுமார் ரூ.3.25 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர்கள் பொருத்துப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்.

இந்த நிலையில், தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று, சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் முன்னிலையில் நோயாளிகளின் சேவைக்காக ஆக்சிஜன் பேருந்தை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார், ஹயக்ரிவாஸ் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.