கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

 

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

திருப்பூர்

திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக தனியார் அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பேருந்து சேவை விரைவில் தொடங்க உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 600-க்கும் மேலாக பதிவாகி வரும் நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் 4,314 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 156 ஆக்சிஜன் படுக்கைகளும், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக, திருப்பூரை சேர்ந்த யங் இந்தியன்ஸ் திருப்பூர், சக்தி நர்சிங்ஹோம், எஸ்.என்.எஸ். பள்ளி, திருப்பூர் ரைடர்ஸ் கிளப் ஆகிய அமைப்புகள் சார்பில், ஆக்சிஜன் பேருந்து சேவை தொடங்க முடிவு செய்தனர்.

அதன்படி, தனியார் பள்ளி பேருந்தில் 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறுத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த பேருந்தில் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு 3 மணிநேரம் வரை இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.