ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் சோதனை!

 

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் சோதனை!

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் அதன் பரவல் அதிகரித்தது.. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். நினைத்தற்கு எதிராக தினந்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் சோதனை!

கொரானாவுக்கு இன்றுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதே சோகம். இதற்கான முயற்சிகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. விஞ்ஞானிகளும் பரபரப்புடன் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வுகளில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மனிதர்கள் உடலில் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்கும் ஆய்வுகள் தொடந்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி கிடைத்துள்ளது.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் சோதனை!

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ட்ரா ஜெனிக்கா கோவிட்-19 தடுப்பு மருந்தை (COVISHIELD) இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் மருத்துவமனை சார்ந்து பரிசோதித்துப் பார்க்க பூனாவில் உள்ள சீரம்  ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜிஐ) அனுமதி அளித்துள்ளார்.