ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை மீண்டும் தொடக்கம்

 

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை மீண்டும் தொடக்கம்

கொரோனா போன்ற உலகம் முழுவதும் பாதிக்கக்கூடிய ஒரு பேரிடரை இதற்கு முன் உலகம் சந்திருக்குமா என்பது சந்தேகமே.

செப்டம்பர் 13-ம் தேதி காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 89 லட்சத்து  28 ஆயிரத்து 207 பேர்.    

 கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 20 ஆயிரத்து 208 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 



இந்தியா, அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை மீண்டும் தொடக்கம்
கொரோனா வைரஸ்

தடுப்பூசி மட்டுமே கொரோனாவைத் தடுக்கும் ஒரே வழியாக மாறிவிட்டது.  அதற்கான முயற்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து சோதனை மீண்டும் தொடக்கம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் கிளினிக்கல் பரிசோதனைகளை நடத்தி வந்தது.  தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு தன்னார்வலரின் உடல்நிலை சரியில்லாமல் போகவே, பரிசோதனைகளை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் பரிசோதனையை தொடங்க பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டகம் அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால்  கோவிஷீல்ட்  தடுப்பூசியின் அடுத்த கட்ட கிளினிக்கல் பரிசோதனைகளைத் தொடர ஆரம்பித்துள்ளனர்.