திமுகவுடன் ஓவைஸி கட்சி கூட்டணியா? – சட்டமன்ற தேர்தலில் புதிய திருப்பம்

 

திமுகவுடன் ஓவைஸி கட்சி கூட்டணியா? – சட்டமன்ற தேர்தலில் புதிய திருப்பம்

சட்டமன்ற தேர்தலை இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு எதிர்கொள்ள விருக்கிறது. அதிமுக – திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகின்றன.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய மோதல் இல்லை. ஆனால், அதிமுகவின் கூட்டணிக்குள் சமீபமாக சில சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. அக்டோபர் முதல்வாரத்தில் சில சமரசங்கள் நடைபெற்று, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளர் என பன்னீர்செல்வமே அறிவித்தார். அதனால், கட்சியின் மிகப் பெரிய சிக்கல் தீர்ந்தது என நினைத்தார்கள். ஆனால், சிக்கலே அதிலிருந்து தற்போது தொடங்கியிருக்கிறது.

திமுகவுடன் ஓவைஸி கட்சி கூட்டணியா? – சட்டமன்ற தேர்தலில் புதிய திருப்பம்

பாஜக – பாமக இருகட்சிகளிலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கங்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றன. இரு கட்சிகளும் ’எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர். கூட்டணி கட்சி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றே தெரிவிக்கின்றன.

இப்போது திமுகவில் இன்னொரு தேசிய கட்சி சேர்வதற்கான வாய்ப்பு உருவாகி வருகிறது. அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் ஓவைசி பீகாரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

திமுகவுடன் ஓவைஸி கட்சி கூட்டணியா? – சட்டமன்ற தேர்தலில் புதிய திருப்பம்

லல்லுபிரசாத் கட்சியும் நித்திஷ்குமார் கட்சியும் மோதிக்கொண்டன. நித்திஷ் குமார் கட்சியோடு பாஜக கூட்டணி வைத்திருந்தது. எனவே, அக்கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்குகள் செல்வதைத் தடுக்க ஓவைசி தனியாக நின்று வாக்குகளைப் பிரித்தார். 5 தொகுதிகளை வெல்லவும் செய்தார். அதனால், பாஜக கூட்டணி பீகாரில் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் ஓவைசி தமிழ்நாட்டில் கால் பதிக்க பல கட்சிகளோடு பேசி வந்தார். முதலில் அவர் அணுகியது திமுகவைத்தான். ஆனால், திமுக பிடிகொடுக்க வில்லை. எங்களைச் சேர்க்கா விட்டால் தோல்வி நிச்சயம் என்றும் அறிக்கை விட்டனர் ஓவைசி கட்சியினர்.

திமுகவுடன் ஓவைஸி கட்சி கூட்டணியா? – சட்டமன்ற தேர்தலில் புதிய திருப்பம்

இந்நிலையில் ஜனவரி மாதம் 6-ம் தேதி திமுக முன்னெடுக்கும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஓவைசி கலந்துகொள்ள விருக்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் ஓவைசி கட்சி இடம்பெறுவது ஓரளவு உறுதியாகி உள்ளது. ஆனால், பாஜகவின் B டீம் எனச் சொல்லி வரும் ஓவைசியுடன் திமுக எப்படி கூட்டணி வைத்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இது சட்டமன்ற தேர்தலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.