டிடிவி தினகரனுடன் ஒவைசி சந்திப்பு

 

டிடிவி தினகரனுடன் ஒவைசி சந்திப்பு

சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில், ஒவைசி கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன், அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி சந்தித்து வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

டிடிவி தினகரனுடன் ஒவைசி சந்திப்பு

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், சீமான் கட்சி மற்றும் தினகரன் கட்சி ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அமமுக கூட்டணியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்றார். தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக – திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளும் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஓவைசியால் இந்த நிலை மாறும் என்றே தெரிகிறது.