சென்னை வருகிறார் ஓவைசி!

 

சென்னை வருகிறார் ஓவைசி!

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், சீமான் கட்சி மற்றும் தினகரன் கட்சி ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இதில் அமமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை வருகிறார் ஓவைசி!

இந்நிலையில் சென்னையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஓவைசி கலந்து கொள்கிறார். அமமுக கூட்டணியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்கிறார். கூட்டத்திற்கு பின் அவர், பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக – திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளும் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த நிலை மாறும் என்றே தெரிகிறது. காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் கிங்மேக்கராக இருந்த அசாதுதீன் ஓவைசி தமிழக சட்டம்ன்ற தேர்தலில் அமமுகவுடன் கைக்கோர்க்கிறார். அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஐதராபாத்திலும், பீகாரிலும் தவிர்க்க முடியாத தலைவராக ஜொலிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.