109 நாட்களில் 1 லட்சம்…. அடுத்த ஒன்பதே நாட்களில் 50 ஆயிரத்தை கடந்தது…. தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவல்…

109 நாட்களில் 1 லட்சம்…. அடுத்த ஒன்பதே நாட்களில் 50 ஆயிரத்தை கடந்தது…. தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவல்…

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டி விட்டது. முதன் முதலில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த 109 நாட்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது. ஆனால் அடுத்த 50 ஆயிரத்தை வெறும் ஒன்பதே நாட்களில் எட்டி விட்டது.

109 நாட்களில் 1 லட்சம்…. அடுத்த ஒன்பதே நாட்களில் 50 ஆயிரத்தை கடந்தது…. தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் தொற்றுநோய் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக உள்ளது.

109 நாட்களில் 1 லட்சம்…. அடுத்த ஒன்பதே நாட்களில் 50 ஆயிரத்தை கடந்தது…. தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவல்…

வேர்ல்டுமீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் தகவல்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,086ஆக உயர்ந்துள்ளது. இதில் 72,283 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், 67,749 பேர் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். மேலும் தொற்று நோய்க்கு 4,534 பேர் பலியாகி உள்ளனர்.