அதிமுகவில் 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்… சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

 

அதிமுகவில் 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்… சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அப்போதே முதல்வரும் துணை முதல்வரும் தங்களது ஆஸ்தான தொகுதியான முறையே எடப்பாடியிலும் போடிநாயக்கனூரிலும் போட்டியிட மனு கொடுத்தார். இதையடுத்து அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களைக் கொடுத்திருந்தனர்.

அதிமுகவில் 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்… சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

அடுத்த நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் வழங்கினார்கள். நேற்று இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 700ஐ தாண்டியிருந்தது. இன்றும் ஏராளமானோரிடமிருந்து மனுக்கள் வரப்பெற்றன. தற்போதைய நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் பேர் வரை விருப்ப மனுக்கள் கொடுத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த சனிக்கிழமைக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.