மோடியின் மான் கி பாத் உரைக்கு குவியும் டிஸ்லைக்! – பா.ஜ.க அதிர்ச்சி

 

மோடியின் மான் கி பாத் உரைக்கு குவியும் டிஸ்லைக்! – பா.ஜ.க அதிர்ச்சி


பிரதமர் மோடி நேற்று (ஆகஸ்ட் 30) பேசிய மான் கி பாத் உரையாடல் பதிவுக்கு யூடியூபில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ் லைக் செய்திருப்பது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி எதிர்த்து கேள்வி கேட்க முடியாத இடத்தில் எல்லாம் சிறப்பாக பேசுவார் என்ற விமர்சனம் உள்ளது. பிரதமர் ஆன பிறகு அவர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பேட்டி அளித்தார். அதன்பிறகு

மோடியின் மான் கி பாத் உரைக்கு குவியும் டிஸ்லைக்! – பா.ஜ.க அதிர்ச்சி

பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதே இல்லை. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் பங்கேற்று பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் பேசுவார். வட இந்தியாவில் ஏராளமானோர் வானொலி முன்பு திரண்டு இதை கேட்டு வருகின்றனர். நேற்று அவர் உரையாற்றியதன் பதிவை பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. வெளியிட்ட சில மணி நேரத்தில் அதற்கு டிஸ்லைக் குவிய ஆரம்பித்துவிட்டது. லைக் சில ஆயிரம், டிஸ் லைக் லட்சத்தைத் தொட்டது.

மோடியின் மான் கி பாத் உரைக்கு குவியும் டிஸ்லைக்! – பா.ஜ.க அதிர்ச்சி


இன்றும் வேக வேகமாக டிஸ்லைக் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பதிவிட்ட 24 மணி நேரத்தில் மூன்றே கால் லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்துள்ளனர். பலரும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு டிஸ்லைக் செய்யவே, பா.ஜ.க-வினரும் லைக் போடத் தொடங்கியுள்ளனர். சில ஆயிரங்களில் இருந்த டிஸ்லைக் எண்ணிக்கை இன்று மளமளவென உயரத் தொடங்கியுள்ளது. காலை நேர நிலவரப்படி 40 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் மனதின் குரல் பதிவிட்ட போது அதற்கு 4600 பேர் லைக்கும், 2500 பேர் டிஸ்லைக் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை மத்திய அரசு மீது உள்ள வெறுப்பின் காரணமாக டிஸ் லைக் செய்வதை ஒரு இயக்கமாகவே கருதி பலரும் செய்து வருகின்றனர்.