“என் டிரஸ்ச போட்டுக்கோ ,என் ஆதார் அட்டையை மாட்டிக்கோ” -கொலை வழக்குல ஜாமீன்ல வந்தவர் பண்ண தில்லுமுல்லு

 

“என் டிரஸ்ச போட்டுக்கோ ,என் ஆதார் அட்டையை மாட்டிக்கோ” -கொலை வழக்குல ஜாமீன்ல வந்தவர் பண்ண தில்லுமுல்லு

ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் அதிலிருந்து தப்பிக்க தான் இறந்து விட்டதாக போலீசாரை நம்ப வைக்க நடத்திய நாடகம் அம்பலமானது.

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் குமார் என்பவரை கடந்த மாதம் போலிஸார் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைது செய்தனர் .கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த அவர் கொலை வழக்கிலிருந்து பொலிஸிடமிருந்து தப்பிக்க ஒரு நூதமான திட்டம் தீட்டினார் .
அதன் படி அவர் தனக்கு தெரிந்த ஒருவருக்கு பணம் கொடுப்பதாக கூறி தன்னுடைய ஆடைகளை கொடுத்து அதை அணிந்து கொள்ள சொன்னார் .பிறகு அவரை அங்குள்ள ஒரு காட்டுக்கு அழைத்து சென்றார் .பிறகு அந்த காட்டுக்குள் மேலும் சிலருடன் உதவியோடு அவரை அடித்து கொலை செய்து விட்டார் .அதுமட்டுமில்லாமல் அவரின் முகத்தை சிதைத்து விட்டார் .பிறகு தன்னுடைய ஆதார் கார்டை அவரின் மேலே மாட்டிவிட்டு ஓடிவிட்டார் .
பிறகு ஊர் மக்கள் அந்த காட்டுப்பகுதிக்குள் வந்து பார்த்த போது அந்த காட்டில் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கூறினார்கள் .போலீசார் விரைந்து வந்து அந்த பிரேதத்தை கைப்பற்றி அதன் மேல் இருந்த ஆதார் கார்டின் உதவியால் இறந்தவர் ஜாமீனில் வெளியே வந்த குமார் என்று முடிவு செய்தாலும் அவர்களுக்கு சின்ன சந்தேகம் இருந்தது .
அதனால் குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவியை பிடித்து அவரின் உதவியோடு குமாரின் புது மொபைலுக்கு போன் செய்த போது அவர் உயிரோடு இருக்கும் விஷயம் போலீசுக்கு தெரிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் .பிறகு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குமாரை அவர் மனைவி கொடுத்த துப்பு மூலம் பிடித்தார்கள்.பிறகு அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பினார்கள் .

“என் டிரஸ்ச போட்டுக்கோ ,என் ஆதார் அட்டையை மாட்டிக்கோ” -கொலை வழக்குல ஜாமீன்ல வந்தவர் பண்ண தில்லுமுல்லு