’எங்களின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது’ அடித்துச் சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்

’எங்களின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது’ அடித்துச் சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்

கொரோனா பேரழிவுக் காலம் இது. தினந்தோறும் லட்சணக்கில் புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல உலகளவில் இறந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 17 லட்சத்து  88 ஆயிரத்து 085 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 840 நபர்கள்.

’எங்களின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது’ அடித்துச் சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 75 ஆயிரத்து 551 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,08,694 பேர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு எனும் நிலைமையை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன.

’எங்களின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது’ அடித்துச் சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்

பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டறியும் முயற்சியில் உள்ளன. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

’எங்களின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது’ அடித்துச் சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்

இந்நிலையில் நேற்று ஐநா விழாவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ”ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் V எனும் கொரோனா தடுப்பூசி பாதுகப்பானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை மற்ற நாடுகலுக்கு வழங்க தயாராகவே இருக்கிறோம்.

ஐநா சபை ஊழியர்கள் விரும்பினால், அவர்களுக்கு இலவசமாகவே எங்களின் தயாரிப்பான ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசியை அளிப்போம்’ என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.