வெளியூர் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் : குழப்பத்தில் பெற்றோர்கள்!

வெளியூர் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் : குழப்பத்தில் பெற்றோர்கள்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வெளியூர் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் : குழப்பத்தில் பெற்றோர்கள்!

தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் வெளிமாநிலத்தவர்களுக்கு புதிய சிக்கல் உண்டாக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

வெளியூர் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் : குழப்பத்தில் பெற்றோர்கள்!
தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் வெளிமாநில மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, அவர்கள் தங்குமிடம் போன்றவை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையிலிருந்து சென்ற மாணவிக்கு கொரோனா உறுதியானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி விடுதிகளும் கூட 15 ஆம் தேதியே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுகுறித்த தெளிவின்றி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.