• February
    22
    Saturday

Main Area

Main



ஆஸ்கர் 2020: சிறப்பாக உடை அணிந்து ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகைகள்!

oscar 2020
oscar 2020

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் நடந்த 2020 ஆஸ்கர் விருதுகள் விழாவுக்கு சிறப்பாக உடை அணிந்து வந்து ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘2020 ஆஸ்கர் விருதுகள்’ விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு வருடமும் விருதுகள் பெறும் பிரபலங்கள் உலகம் முழுக்க புகழை பெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்த விழாவுக்கு சினிமா பிரபலங்கள் அணிந்து வந்த உடைகள் குறித்தும் பரவலாக பேசப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆஸ்கர் விழாவில் சிறப்பாக உடை அணிந்து வந்து ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ttn

1.ஸ்கார்லட் ஜான்சன்:

‘ஜோஜோ ரேபிட்’ படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவிலும், ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்திற்காக சிறந்த நடிகை பிரிவிலும் ஸ்கார்லட் ஜான்சன் இந்தாண்டு ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்தார். பார்ப்பவர்கள் கண்களை உறைய வைக்க கூடிய மெட்டாலிக் கவுனை அணிந்து இவர் ரெட் கார்பெட்டில் அட்டகாசமாக போஸ் கொடுத்தார்.

ttn

2.மார்கட் ராபி:

விண்டேஜ் லுக்கில் மீண்டும் ஒருமுறை பார்வையாளர்கள் கவனத்தை தன்பக்கம் மார்கட் ராபி ஈர்த்து விட்டார். கருமை நிற கவுனை அணிந்து வந்தார். மென்மையான கர்ல் முடி, அடர்த்தியான ரெட் லிப்ஸ்டிக் அணிந்து வந்து ஆஸ்கர் விழாவின் ரெட் கார்பெட்டில் அசத்தலாக போஸ் கொடுத்தார்.

ttn

3.சார்லிஸ் தெரன்:

‘பாம்ஷெல்’ படத்திற்காக சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த தென்ஆப்பரிக்க நடிகை சார்லிஸ் தெரன், கருப்பு நிற அவுட்ஃபிட்டில் நெக்லஸ் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து வந்து ஈர்ப்பான போஸ் கொடுத்தார்.

ttn

4.கேல் கடோட்:

‘வொண்டர் வுமன்’ நாயகி கேல் கடோட் கருப்பு மற்றும் வெள்ளை நிற கவுனில் மிகவும் அழகாக வந்திருந்தார். மேலும் அவர் அணிந்திருந்த வெண்மை நிற டைமன்ட் நெக்லஸ் பார்ப்பவர்கள் மனதை கொள்ளை அடித்தது.

ttn

5.நடாலி போர்ட்மேன்:

எளிமையான அதேசமயம் கச்சிதமான கருப்பு மற்றும் தங்க நிற ஆடையில் நடாலி போர்ட்மேன் மிகவும் அழகாக தெரிந்தார். மேலும் அவரது ஆடையில் டீடெயிலிங் அற்புதமாக இருந்தது. அத்துடன் கார்செட் ஸ்டைலில் மேல் அங்கியை அணிந்து வந்திருந்தார்.

ttn

6.ரெனீ ஜெல்வேஜர்:

இந்தாண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘ஜூடி’ படத்திற்காக வென்று அசத்திய ரெனீ ஜெல்வேஜர் அதிக டிசைன்கள் இல்லாத வெண்மை நிற கவுனில் எளிமையாக அதேசமயம் அட்டகாசமாக காட்சியளித்தார். ஒரு தோளை மட்டும் அணைக்கும் வகையில் அந்த ஆடை இருந்தது.

ttn

7.பெனிலோப் க்ரஸ்:

கிளாசிக் கலர் கோடுடன் கூடிய கருப்பு நிற ஆடையில், இடுப்பில் முத்துமாலை அணிந்து அழகாக காட்சியளித்தார் பெனிலோப் க்ரஸ். இந்த ஆடை கழுத்தில் இருந்து தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ttn

8.ஜனலே மோனா:

மிகவும் ஜொலி,ஜொலிக்கும் சில்வர் நிற கவுனில் பார்ப்பவர்கள் கண்களை ஈர்க்கும் வகையில் ஜனலே மோனா ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் அசத்தலாக போஸ் கொடுத்தார். மேலும் தலையில் மேலாடையை அணியும் வண்ணம் அந்த ஆடையை அணிந்திருந்தார்.

அடுத்த ஆண்டு எந்தெந்த நடிகைகள் அட்டகாசமான ஆடையில் காட்சியளிப்பார்கள் என்று இப்போது முதலே பெண்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.