பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுக தோற்குமா?- அமைச்சர் ஓ.எஸ் மணியன்

 

பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுக தோற்குமா?- அமைச்சர் ஓ.எஸ் மணியன்

வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ் மணியன், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி வெள்ளம் பெரு மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணமாக நாகை மாவட்டத்தில் 600 கோடி ரூபாய் 7-ம் தேதி முதல் 79 ஆயிரத்து 236 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பயிர் பாதிக்கப்பட்ட 37 ஆயிரத்து 874 ஹெக்டேரில் 61 ஆயிரத்து 976 விவசாயிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் சேதம் அடைந்த 44 ஆயிரத்து 511 ஹெக்டரில் 58 ஆயிரத்து 760 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை 11ஆம் தேதி முதல் வரவு வைக்கப்படும்.

பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுக தோற்குமா?- அமைச்சர் ஓ.எஸ் மணியன்

மூன்றாவது முறையாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுக தோற்கும் என்ற கருத்து முற்றிலும் முரணானது. தமிழகத்தில் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், சட்டமன்ற தேர்தல் என்று வரும்போது அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. சசிகலா முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம்!” எனக் கூறினார்.