கேரளாவில் யானையை வெடிபொருள் வைத்து கொன்றவர்களை அடையாளப்படுத்தினால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் !

கேரளாவில் யானையை வெடிபொருள் வைத்து கொன்றவர்களை அடையாளப்படுத்தினால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் !

கேரளா மாநிலம் மலப்புரத்தில் 15 வயது கர்ப்பிணி காட்டு யானைக்கு பழத்துடன் வெடிபொருள் வைத்து கொல்லப்பட்டதை அடுத்து ஹுமேன் சொசைட்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பு யானையை கொன்றவர்களை அடையாளப்படுத்தினால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

“சமூக-மனித-வனவிலங்கு மோதலின் தாக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எந்தவொரு பழிவாங்கும் செயலையும் அல்லது காட்டு விலங்குகளை கொல்வதையும் கடுமையாக கண்டிக்கிறோம்” என்று வெகுமதியை அறிவித்த பின்னர் எச்.எஸ்.ஐ இந்தியா அமைப்பு நிறுவனர் கூறினார்.

கேரளாவில் யானையை வெடிபொருள் வைத்து கொன்றவர்களை அடையாளப்படுத்தினால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் !
யானை கொல்லப்பட்ட சம்பவத்தை அனைத்து தரப்பு மக்களும் கண்டித்துள்ளனர். கேரள வனத்துறை ஏற்கனவே குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்துள்ளது. உணவு தேடி கிராமத்தில் அலைந்து திரிந்த யானைக்கு யாரோ சிலர் வெடிபொருந்துகளுடன் கூடிய அன்னாசிப்பழத்தை கொடுத்துள்ளனர். அதை யானை தின்றபோது பட்டாசு வெடித்ததால் காயப்பட்டு இறந்து போனது. யானையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

கேரளாவில் யானையை வெடிபொருள் வைத்து கொன்றவர்களை அடையாளப்படுத்தினால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் !
இதுகுறித்து வன ஆர்வலர் கூறுகையில், பொதுமக்களை நம்பி அந்த யானை அன்னாச்சிபழத்தை சாப்பிட்டுள்ளது. அதில் வெடிபொருள் இருக்கிறது என தெரியாமல் யானை சாப்பிட்டுள்ளது. மேலும் அந்த யானை கர்ப்பமாகவும் இருந்துள்ளது என தெரிவித்தார்.”
வெடிபொருள் வெடித்ததால் காயம் அடைந்த யானை பட்டினியால் சுற்றி உள்ளது. உணவுக்காக அலைந்து திரிந்து கடைசியில் ஒரு ஆற்றில் நீர்குடிக்கும்போது இறந்துவிட்டது என தெரிவித்தார்.

இந்த கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விராட் கோலி, சுனில் சேத்ரி உள்ளிட்டோரும் யானை கொல்லப்பட்டதை கண்டித்துள்ளனர்.