பொதுத்தேர்வு ரத்து.. மதிப்பெண் கணக்கிட மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை சமர்ப்பிக்க உத்தரவு!

பொதுத்தேர்வு ரத்து.. மதிப்பெண் கணக்கிட மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை சமர்ப்பிக்க உத்தரவு!

ஜூன் 15 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக கடந்த 9 ஆம் தேதி அறிவிக்கபபட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் எழுந்த அனைத்து வழக்குகளும் தமிழக அரசு 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தாக்கல் செய்ததால் முடித்து வைக்கப்பட்டது.

பொதுத்தேர்வு ரத்து.. மதிப்பெண் கணக்கிட மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை சமர்ப்பிக்க உத்தரவு!

இந்நிலையில் தேர்வு இல்லாமல் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கும் பணி தொடங்க உள்ளது. அதற்காக, மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிட அவர்களின் வருகைப் பதிவேட்டினை தலைமையாசிரியர்கள் நாளைக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.