உள்ளாட்சித் தேர்தல் ; 24 மணி நேரமும் கண்காணிக்க பறக்கும் படை அமைக்க உத்தரவு!

 

உள்ளாட்சித் தேர்தல் ; 24 மணி நேரமும் கண்காணிக்க பறக்கும் படை அமைக்க உத்தரவு!

தமிழகத்தில் வருகின்ற அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையோடு நிறைவடைய உள்ளது. வரும் 25ம் தேதி வரையில் வேட்பு மனுக்களை திரும்பப்பெறுதலுக்கான கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிட்டன.

உள்ளாட்சித் தேர்தல் ; 24 மணி நேரமும் கண்காணிக்க பறக்கும் படை அமைக்க உத்தரவு!

தேர்தல் நடக்கவுள்ள 9 மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் புகாரளிக்க தேர்தல் ஆணையம் புகார் எண்களையும் அறிவித்துள்ளது. பறக்கும் படை அதிகாரிகளும் தீவிரமாக சோதனை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 24 மணி நேரமும் கண்காணிக்க உடனடியாக பறக்கும் படையை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.