பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாப்கீன், முட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

 

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாப்கீன், முட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதே போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவை நம்பியே பல குடும்பங்கள் பிழைக்கின்றன. அதனால் இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாப்கீன், முட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் எப்படி முட்டை, நாப்கின் வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.