சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4.28 லட்சம் வழங்க உத்தரவு!

 

சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4.28 லட்சம் வழங்க உத்தரவு!

சாத்தான் குளம் அருகே கல்விளை கிராமத்தில் வீட்டிற்கு டிவி பார்க்க வந்த சிறுமியை கல்லூரி மாணவனும், அவனது நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் பின்னர் உடலை தண்ணீர் டிரம்பில் வைத்து ஓடையில் வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையின் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இச்சிறுமி கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சிறுமியின் கொலையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்தக் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாத்தான் குளத்து சிறுமி வழக்கில் தானே முன்வைந்து விசாரணை நடத்தி வருகிறது.

சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4.28 லட்சம் வழங்க உத்தரவு!

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை பெறமாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நடத்திவரும் உறவினர்களிடம் திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் மற்றும் கோட்டாட்சியர் தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கான நலநிதியிலிருந்து முதற்கட்டமாக ரூபாய் 4.28 லட்சம், சிறுமியின் தாயார் உச்சிமாகாளிக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சிறுமியின் 10 வயது சகோதரனுக்கு தேவையான படிப்பு செலவு ஆகியவை அரசு சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறி சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.