கல்லூரி படிப்பை மேற்கொள்ள அசல் சான்றிதழ் வேண்டும்! – நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவன் வழக்கு

கல்லூரி படிப்பை மேற்கொள்ள அசல் சான்றிதழ் வேண்டும்! – நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவன் வழக்கு

நீட் முறைகேட்டில் சிக்கிய மருத்துவக் கல்லூரி மாணவன் உதித் சூர்யா, வேறு படிப்பு படிக்க தன்னுடைய சான்றிதழை வழங்கும்படி கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கல்லூரி படிப்பை மேற்கொள்ள அசல் சான்றிதழ் வேண்டும்! – நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவன் வழக்கு
நீட் தேர்வில் முறைகேடு செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக கைது செய்யப்பட்டவர் உதித் சூர்யா. தற்போது ஜாமீனில் அவர் வெளியே உள்ளார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

கல்லூரி படிப்பை மேற்கொள்ள அசல் சான்றிதழ் வேண்டும்! – நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவன் வழக்கு
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 2019ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக என்னை முதல் குற்றவாளியாக போலீசார் சேர்த்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளேன். என்னுடைய 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். என்னுடைய எதிர்காலத்தைக் கருதி கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

கல்லூரி படிப்பை மேற்கொள்ள அசல் சான்றிதழ் வேண்டும்! – நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவன் வழக்குஎனவே, நீதிமன்றம் என் படிப்புக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் எந்த ஒரு நிபந்தனையையும் ஏற்கத் தயாராக உள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இது குறித்து அரசு தரப்பு தன்னுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.