பாஜக எம்பிக்கள் நாளை மாநிலங்களவைக்கு வர வேண்டும்: பாஜக கொறடா உத்தரவு!

 

பாஜக எம்பிக்கள் நாளை மாநிலங்களவைக்கு வர வேண்டும்: பாஜக கொறடா உத்தரவு!

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதால் பாஜக எம்பிக்கள் அவைக்கு வர உத்தரவிடப்படுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வேளாண் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு இந்த மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், இந்த மசோதா சட்டமானால் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை என்பதே இருக்காது என்றும் விவசாயிகளுக்கு இந்த மசோதா பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பாஜக எம்பிக்கள் நாளை மாநிலங்களவைக்கு வர வேண்டும்: பாஜக கொறடா உத்தரவு!

அதே போல, தற்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சந்தைக் கட்டணம், வரிகள் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் என்றும் அச்சம் தெரிவித்தன. இதனிடையே மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இத்தகையை எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் விவாசாய மசோதாக்கள் நிறைவேறியது. மேலும், இந்த மசோதாக்கள் நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனால், மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் நாளை அவைக்கு வர பாஜக கொறடா தற்போது உத்தரவிட்டுள்ளார்.