கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

 

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, குணமடையும் விகிதம், பலி எண்ணிக்கை என அனைத்து தகவல்களையும் மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனிடையே முதல்வர் பழனிசாமியும் மருத்துவர்கள் நிபுணர் குழுவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் பகுதிநேர கணினி ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில், கொரோனா நோயாளிகளின் விவரங்களை 17 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கணினியில் பதிவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.