`கூட்டுறவு வங்கிகளில் கடன் நிறுத்தம்; விவசாயிகள் ஷாக்!’- தமிழகத்துக்கு முதல் `செக்’

 

`கூட்டுறவு வங்கிகளில் கடன் நிறுத்தம்; விவசாயிகள் ஷாக்!’- தமிழகத்துக்கு முதல் `செக்’

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

`கூட்டுறவு வங்கிகளில் கடன் நிறுத்தம்; விவசாயிகள் ஷாக்!’- தமிழகத்துக்கு முதல் `செக்’

மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துவிட்டார். தற்போது அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டுறவு இயக்கம், வெகு நீண்ட காலமாக, மாநில மக்களுடன் மாநிலத்தில் உள்ள அடித்தட்டு, கிராமப்புற மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது. விவசாயிகளுக்குப் பல வகையிலான கடன்களை வழங்கிட மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஓர் அமைப்பு.

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியே தற்போது கேள்விக்குறியாகியுள்ள சூழலில், மாநிலங்களில் குறிப்பாக மாவட்ட அளவில் செயல்படும் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கூட, டெல்லியில் இருந்து, தொலைதூரக் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவும், அந்த வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் குழுக்களைக் கலைக்கும் அதிகாரம் பெறவும், ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது.

`கூட்டுறவு வங்கிகளில் கடன் நிறுத்தம்; விவசாயிகள் ஷாக்!’- தமிழகத்துக்கு முதல் `செக்’

இது எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு மாநில அரசுகள் விவசாயக் கடன் வழங்குவதற்குத் தடையாக இருக்கும். ஏன், பேரழிவில், பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடன்களைக் கூட ரத்து செய்ய முடியாத இக்கட்டான நிலையை மாநில அரசுகளுக்கு உருவாக்கும். எனவே, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய – மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத, ஆரோக்கியமற்ற செயலாகும்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்திலும், விவசாயிகள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்திடும் வகையிலும், முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரசாக வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

`கூட்டுறவு வங்கிகளில் கடன் நிறுத்தம்; விவசாயிகள் ஷாக்!’- தமிழகத்துக்கு முதல் `செக்’

இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் விவசாயிகள் ஷாக் ஆகியுள்ளனர்.

இதனிடையே, நகைக்கடன் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் மீண்டும் நகைக்கடன் வழங்கப்படுவது எப்போது தொடங்கும் என தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.