நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத் தோல் டீ!

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத் தோல் டீ!

உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் விருப்பி குடிக்கும் பானம் தேநீர். க்ரீன் டீ, பிளாக் டீ என்று விதவிதமான தேநீரை மக்கள் ருசித்துப் பருகி வருகின்றனர். ஒரு கப் தேநீர் அருந்துவது மூளையை புத்துணர்வு அடையச் செய்து நம்மைச் சுறுசுறுப்பாக்கி விடுகிறது. இந்தியாவில் தேநீர் என்றால் அது பாலுடன் சேர்ந்து தயாரிக்கப்படும் கலவையாக உள்ளது. இப்படி செய்யும் போது பால் மற்றும் தேநீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடுகின்றன. வெறும் வெந்நீரில் சிறிது தேயிலைத் தூல் சேர்த்து அருந்தும்போது முழு பலனும் கிடைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத் தோல் டீ!

வழக்கமான தேநீருக்கு மாற்றாக பலரும் க்ரீன் டீக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். க்ரீன் டீ குடித்து சலிப்படைந்தவர்களுக்கு பல டீ-க்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆரஞ்சு பழத் தோல் டீ.

அரை ஆரஞ்சு பழத்தின் தோல், ஒரு கப் தண்ணீர், அரை இன்ச் பட்டை, 2-3 கிராம்பு. 1-2 ஏலக்காய், அரை டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை இருந்தால் ஆரஞ்சு பழத் தோல் தேநீரை தயாரித்துவிடலாம்.

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். வெந்நீர் கொதித்ததும் அடுப்பை மீடியம் தீயில் வைக்க வேண்டும். அதில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட ஆரஞ்சு பழத் தேளைப் போட்டு 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் ஆரஞ்சு தோல் தேநீர் தயாராகிவிடும்.

பலன்கள்:

ஆரஞ்சு பழத்தின் தோலில் ஆரஞ்சு பழத்தின் சத்துக்களை காப்பாற்றும் வகையில் பல விதமான ஃபிளவனாய்ட்ஸ், ஆன்டிஆக்சிடண்ட் உள்ளன. வைட்டமின் சி, ப்ரோவைட்டமின் ஏ, ஃபோலேட், ரிபோஃபிளேவின், தயாமின், கால்சியம் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையாமல் தடுத்து நிறுத்துகின்றன.

செரிமானத்துக்கு உதவும் எச்சில் உற்பத்தியைத் தூண்டுகிறது. செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதை ஒழுங்குபடுத்துகிறது.

டைப் 2 சர்க்கரை நோய், உடல் பருமன், அல்சைமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பை இந்த தேநீர் உருவாக்குகிறது.