தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் கோவை, நீலகிரி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால் கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆந்திரா, தெலுங்கானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கேரளா, கர்நாடகாவை ஒட்டிய கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.