டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் ஆரக்கிள் ?

 

வாஷிங்டன்

அமெரிக்காவில், டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அல்லது ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளித்த முன்வரைவை டிக்டாக் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் ஆரக்கிள் ?

அமெரிக்க வாடிக்கையாளர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் சீனாவுக்கு கொண்டு செல்வதாகக் கூறி, அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார். செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்ட நிலையில், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் முடிவு செய்துள்ளது.

டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் ஆரக்கிள் ?

இது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுடன் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில், மைக்ரோசாஃப்ட் அல்லது ஆரக்கிள் நிறுவனத்துக்கு கைமாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில், இறுதி முடிவு எட்டவில்லை என்றும், அதே நேரத்தில் ஆரக்கிள் நிறுவனத்துடனும் டிக் டாக் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் ஆரக்கிள் ?

டிக் டாக் செயலி அமெரிக்காவில் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட இறுதி கெடு நீட்டிக்கப்படாது என அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்யவில்லை.அமெரிக்காவில் டிக் டாக் நிறுவனத்துக்கு 10 கோடி பயனர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.-அ.ஷாலினி