‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

 

‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

அதிமுக செயற்குழுவில் நடந்த விவாதத்தை மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். நீயா ? நானா ? என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையிலான வாதங்கள் தேர்தலை எதிர்கொள்ள சிக்கலாக இருக்கும் என அந்த கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

இருவருக்கும் நேரடியாகவே நடந்த காரசார விவாதத்தில் முடிவுகள் எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அடுத்த மாதம் 7ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்த வகையில், இல்லை என்றே தெரிவிக்கின்றனர். ஏழாம் தேதிக்குள் ஒருமித்த முடிவுக்கு வருவதும், அறிவிப்பதும் சாத்தியமில்லை என்றும், அப்படியே அறிவிக்கப்பட்டாலும் அது ஒட்டவைக்கப்பட்டதாக இருக்கும் என்கின்றனர்.

‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கை ஓங்கியுள்ளதால், இந்த விஷயத்தில் அவருக்கு எந்த அழுத்தமும் ஏற்படப் போவதில்லை. ஒருமித்த கருத்து என்கிற நெருக்கடி ஓபிஎஸ் தரப்புக்குத்தான் அழுத்தத்தை உருவாக்க உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்வைக்கப்படும் வாதங்களில், கட்சியையும், ஆட்சியையும் கடந்த 4 ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக கொண்டு வந்ததை முன்வைக்கிறார்.

தற்போதைய சூழலில் மக்களிடம் நேரடியாக நெருங்கி, ஆட்சிப் பணிகளை கொண்டு செல்வது, எளிமையானவர் என்கிற அடையாளம் போன்றவற்றை முன்வைக்கிறார். கூடவே ஆட்சி அதிகாரம் இருப்பதால் கட்சி அணிகளிடம் ஆதரவை பெற முடியும் என நம்புகிறார்.

‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

இப்படி, கட்சியில் தனக்கான சாதகமான சூழல் உள்ளதால் அதை தாரை வார்க்க அவர் தயாராக இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கலாம் என முடிவானால், அதை ஓ.பி.எஸ் தரப்பு இதை ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்கிற நிலை உள்ளது. இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படலாம் என்பதும் கணிக்க முடிகிறது.

‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்படுத்தும் குழப்பம் என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது கட்சி நிர்வாகிகளிடம் உள்ள கேள்வியாக உள்ளது ?

பழையபடி ஆதரவாளர்களோடு வெளியேறுவார் என்றால், அவர் பின்னால் அணி திரள கட்சியினர் தயாராக இல்லை. அவர் மட்டும் வெளியேறினால், அவருக்கான ஆதரவு என்ன என்பதில் இருந்து கட்சிக்கு இழப்பு இருக்குமா ? இல்லையா என்பது தெரிந்து விடும்.

இந்த இக்கட்டான நெருக்கடிகளால் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை ஓ.பி.எஸ். எடுக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கிட்டத்தட்ட தேர்தல் நேரத்தில், தனக்கான எந்த குழியையும் அவர் தோண்டி கொள்ள விரும்ப மாட்டர். ஆனால் கட்சிக்கு குழி தோண்டும் வேலையை செய்வார் என நிர்வாகிகள் கூறுகின்றனர்.

‘வேறு வாய்ப்புகள் இல்லாத ஓ.பி.எஸ்’ -அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின் தனிமரமா ?

எடப்பாடி தலைமையை ஒப்புக்கொள்ளும் நிலையில், அவர் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த வாய்ப்பில்லை என்றும், தொகுதி பொறுப்புகளை பெற்றுக் கொண்டு வேலைகளை செய்யாமல் முடக்குவார் என்றும் கூறுகிறார்கள். இது கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் வேலையாக இருக்கும்.

அடுத்ததாக அவர் முன் இருக்கும் இன்னொரு வாய்ப்பு ; மீண்டும் தினகரனோடு சேர்வது. இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் , அவர் மட்டும்தான் கட்சியில் இருந்து வெளியேறுவார். கூடவே அழைத்துச் செல்ல அவரை நம்பிய ஆதரவாளர்கள் இல்லை. இப்படியான நிலையில், அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.- தமிழ்தீபன்